/உள்ளூர் செய்திகள்/தேனி/ பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி
பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி
பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி
பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி
ADDED : ஜூலை 11, 2024 05:40 AM
தேனி: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் பேசினர். அறிவியல் கண்காட்சியில் தேனி, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 250 கண்டுபிடிப்புகளை காட்சி படுத்தி இருந்தனர்.
கண்காட்சி நடுவர்களாக பெங்களூரு அக்ரோ லேப் நிர்வாக இயக்குனர் தனவிக்னேஷ், சென்னை லாக்ஸ்ம்ஸ் நிர்வாக இயக்குனர் பிரதீப்குமார், வெப்ராகஸ் புரெடக்சன் மேனேஜர் நந்தகுமார், மதுரை ப்பினக்கல் இன்போ டெக் சொலியூசன்ஸ் துணைமேலாளர் சுதாகர், இணைமேலாளர் டோனோ, திருநெல்வேலி டெக்கன்நட் சொலியூசன்ஸ் சி.இ.ஓ., அபிநவ்மரியா, தேனி ஸ்பைகா டெக் சி.இ.ஓ., அருண்ராஜா, சிஸ்டிமா என்.எக்ஸ்., மேனேஜர் லக்ஷ்மிகாந்த், ராஜ்கமல் மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோர் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
பங்கேற்ற மாணவர்களுக்கு பாரட்டு சான்றிதழ்கள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.