லோயர்கேம்பில் மின் உற்பத்தி துவக்கம்
லோயர்கேம்பில் மின் உற்பத்தி துவக்கம்
லோயர்கேம்பில் மின் உற்பத்தி துவக்கம்
ADDED : ஜூன் 03, 2024 03:43 AM
கூடலுார்: லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 30 மெகா வாட் மின் உற்பத்தி துவங்கியது.
லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் தலா 42 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட நான்கு ஜெனரேட்டர்களில்168 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய முடியும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து இங்கு மின் உற்பத்தி நடைபெறும். கடந்த மூன்று மாதங்களாக நீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்தது.
இந்நிலையில் ஜூன் 1ல் அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பராமரிப்பு பணிகளால் முதல் நாள் மின் உற்பத்தி தடைப்பட்டது. நேற்று ஒரு ஜெனரேட்டரில் 30 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது. நீர் திறப்பு அதிகரிக்கும் போது மின் உற்பத்தியும் அதிகரிக்கும்.