/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
ADDED : ஜூன் 01, 2024 05:14 AM
கடமலைக்குண்டு: வருஷநாடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சின்னக்காளை 68, மகள் பாண்டியம்மாளுக்கும், ராயப்பன்பட்டி அருகே சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் முடிந்து இரு குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டதால் இருவரையும் சின்னக்காளை வருஷநாட்டில் உள்ள தனது வீட்டில் குடி அமர்த்தி உள்ளார். குடும்ப செலவிற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து மணிகண்டன் செலவு செய்துள்ளார்.
சின்னக்காளை கண்டித்துள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் கத்தியால் சின்னகாளையை குத்தியதில் பலத்த காயம் அடைந்தார். சின்னக்காளை புகாரில் வருஷநாடு போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.