Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்டத்தில் பயன்பாட்டிற்கான சில்லரை நாணயங்கள் தட்டுப்பாடு: வங்கிகளில் கிடைக்காததால் வியாபாரிகள் அவதி

மாவட்டத்தில் பயன்பாட்டிற்கான சில்லரை நாணயங்கள் தட்டுப்பாடு: வங்கிகளில் கிடைக்காததால் வியாபாரிகள் அவதி

மாவட்டத்தில் பயன்பாட்டிற்கான சில்லரை நாணயங்கள் தட்டுப்பாடு: வங்கிகளில் கிடைக்காததால் வியாபாரிகள் அவதி

மாவட்டத்தில் பயன்பாட்டிற்கான சில்லரை நாணயங்கள் தட்டுப்பாடு: வங்கிகளில் கிடைக்காததால் வியாபாரிகள் அவதி

ADDED : ஜூலை 22, 2024 07:26 AM


Google News
இந்தியாவில் ரூ.1, 2, 5, 10, 20 மதிப்பிலான நாணயங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை சில்லரை வியாபாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதுமட்டும் இன்றி பஸ் பயணங்களிலும் அதிகம் தேவைப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் சில்லரை நாணயம் கிடைப்பதில் சிரமம் நிலவுகிறது. வர்த்தகர்கள், வியாபாரிகள் தங்களுக்கு தேவையான சில்லரைகளை வங்கிகளில் பெற்று வந்தனர். கடந்த சில மாதங்களாக வங்கிகளிலும் சில்லரைகள் வழங்குவது இல்லை. இதுகுறித்து கேட்டால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததை காரணமாக கூறி வந்தனர்.

தற்போது சில்லரை இருப்பு இல்லை என்கின்றனர். இதனால் பல இடங்களில் வியாபாரிகள், பொது மக்களிடையே சில்லரை வழங்குவதில் வாக்குவாதம் எழுகிறது. பஸ் கண்டக்டர்கள் கடைகளில் பணம் கொடுத்து சில்லரை பெற்று பயன்படுத்தி வந்தனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'உதாரணமாக பொது மக்கள் ரூ.50 கொடுத்து ரூ.17க்கு பொருட்கள் வாங்கினால் அவர்களுக்கு மீதம் ரூ.33 வழங்க வேண்டும். மீதம் ரூ.30 எளிதாக வழங்கி விட முடிகிறது. ஆனால் ரூ.3 சில்லரை வழங்குவது சிரமமாக உள்ளது. தெரிந்தவர்கள் பிறகு வாங்கி கொள்கிறோம் என்கின்றனர். சிலர் வேறு பொருட்கள் வாங்கி செல்கின்றனர். அறிமுகம் இல்லாதவர்களிடம் சில்லரை இல்லை என்ற காரணத்திற்காக பொருட்கள் விற்பனை செய்து சில்லரை வழங்குவதில் வாக்குவாதம் எழுகிறது.

தேர்தலுக்கு முன் வங்கிகளில் சில்லரை நாணயங்கள் வழங்கினர். கடந்த 4 மாதங்களாக வழங்கவில்லை. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவு நாணயங்கள் வழங்கினால், வியாபாரிகள், பொது மக்கள் பயனடைவர்.', என்றனர்.

இப்பிரச்னை குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜய சேகர் கூறுகையில், 'எனக்கு எவ்வித புகாரும் இதுவரை கிடைக்க வில்லை. இருப்பினும் விசாரனை மேற்கொண்டு, சில்லரை தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.', என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us