/உள்ளூர் செய்திகள்/தேனி/ பார்வையற்றோருக்கு உதவும் சென்சார் ஷூ குழந்தைகளை கண்டுபிடிக்க கியூ.ஆர்.கோடு வசதி அறிவியல் கண்காட்சியில் அசத்திய பள்ளி மாணவர்கள் பார்வையற்றோருக்கு உதவும் சென்சார் ஷூ குழந்தைகளை கண்டுபிடிக்க கியூ.ஆர்.கோடு வசதி அறிவியல் கண்காட்சியில் அசத்திய பள்ளி மாணவர்கள்
பார்வையற்றோருக்கு உதவும் சென்சார் ஷூ குழந்தைகளை கண்டுபிடிக்க கியூ.ஆர்.கோடு வசதி அறிவியல் கண்காட்சியில் அசத்திய பள்ளி மாணவர்கள்
பார்வையற்றோருக்கு உதவும் சென்சார் ஷூ குழந்தைகளை கண்டுபிடிக்க கியூ.ஆர்.கோடு வசதி அறிவியல் கண்காட்சியில் அசத்திய பள்ளி மாணவர்கள்
பார்வையற்றோருக்கு உதவும் சென்சார் ஷூ குழந்தைகளை கண்டுபிடிக்க கியூ.ஆர்.கோடு வசதி அறிவியல் கண்காட்சியில் அசத்திய பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூலை 21, 2024 08:16 AM

தேனி: ஒவ்வொரு அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்பும் மனித சமுதாய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கு பயன்படும் வகையில் புதிய, புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கப்பட்டுவருகிறது.
கடந்த வாரம் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் மேல்நிலை பள்ளி மாணர்வகளுக்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் புதிய கண்டுபிடிப்புகளாக பார்வையற்றோருக்கு உதவும் சென்சார் ஷூ, கூட்டத்தில் தவறி செல்லும் குழந்தை,முதியோர்களை எளிதில் கண்டுபிடிக்கும் டிராக்கிங் கியூ.ஆர்.,கோடு உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி மாணவர்கள் அசத்தினர்.
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதியை தமிழகம் எங்கும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடடப்பட்டது. அன்றைய நாளில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 115 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.
இவர்கள் தங்கள் கண்டுபிடித்த 220 படைப்புகளை காட்சிப்படுத்தினர். பள்ளி மாணவர்கள் தங்கள் அறிவியல் சிந்தனைகளை சிறகடிக்க விட்டதில் உருவான புதிய கண்டு பிடிப்புகள் ஒவ்வொன்றும் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது.
புவி மாசுபடுவதை தடுத்தல், காற்றில் கலந்த நச்சுகளை நீக்குதல், மின்சாரம் இன்றி இயங்கும் அரவை இயந்திரம், பயிர் பாதுகாப்பு, ரயிலில் வனவிலங்குகள் அடிபடுவதை தவிர்த்தல், மண்சரிவை முன்கூட்டியே அறிதல், நானோடெக்னாலஜி, இயந்திரவியல், பசுமை நகரம் உருவாக்குதல், சந்திராயன் மாதிரி உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர்.
பல்வேறு துறை நிபுணர்கள் அறிவியல் மாதிரிகளை ஆய்வு செய்து மதீப்பீடு செய்து சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினர். கண்காட்சியில் பார்வையகாளர்களை கவர்ந்த படைப்புகள் சில:
பார்வையற்றோருக்கு சென்சார் ஷூ
சந்தோஷ்ராஜா, லிட்டில் கிங்டம் சீனியர் பள்ளி, வேதபுரீ, தேனி
பார்வையற்றோர் நடந்து செல்லும் போது 'ஸ்டிக்' உதவியுடன் செல்கின்றனர். ஸ்டிக் பிடித்து வரும்போது பார்வையற்றவர்கள் என தெரிந்துவிடும். ஸ்டிக் பயன்படுத்துவதை தவிக்க பார்வையற்றோர் பயன்படுத்தும் சென்சார் ஷூ உருவாக்கி உள்ளனர்.
அந்த ஷூ வில் 'அல்ட்ரா சோனிக் சென்சார்' கருவி பொருத்தி, அதனை காதில் இருக்கும் 'ஹெட்போ'னில் இணைக்கப்படும்.
இதனை பயன்படுத்தி நடந்து செல்லும் போது பாதையில் எவ்வளவு துாரத்தில் தடை உள்ளது என்பதை அதிர்வு மூலம் சென்சார் உணர்ந்து அறிவிக்கும். இதனை பார்வையற்றோர் அறிந்து தடையில் இருந்து விலகி செல்லலாம். இதனை பயன்படுத்தும் போது ஸ்டிக் தேவையில்லை. இதனை தயாரிக்க ரூ.ஆயிரத்திற்கும் குறைவாக செலவானது, இதை தயாரிக்க நண்பர்கள் ஹரிபிரசாத், மிர்தினராஜ் உதவினர்.
காணாமல் போனவர்களை கியூ. ஆர். கோடு மூலம் கண்டுபிடிக்கும் கருவி
ஸ்ரீநிதி, டி.எம்.எச்.என்.யூ., வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி:
திருவிழாக்கள், அதிக மக்கள் கூடும் இடங்களில் பெற்றோர் சிலர் தங்கள் குழந்தைகளை தவற விடுகின்றனர். பின் அவர்களை கண்டறிவதற்குள் பதட்டமாகி விடுவார்கள்.
அதே போல் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் காணவில்லை என்றால் அவர்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. தொலைந்து போனவர்களை கியூ. ஆர்., கோடு மூலம் எளிதில் கண்டறியலாம். செயலி மூலம் கியூ.ஆர்., கோடு உருவாக்கி கொள்ள வேண்டும்.
அந்த கோடினை இணையத்தில் இணைத்துவிட வேண்டும். குறிப்பிட்ட கியூ.ஆர்.,கோட்டினை சிறிய அளவில் பிரிண்ட் அவுட் ஆக எடுத்து குழந்தைகள், முதியவர்கள் அணியும் நகை, கடிகாரம், ஆடைகளில் ஸ்டிக்கராக ஒட்ட வேண்டும். இதன் மூலம் அந்த கியூ.ஆர்., கோடு பயணிக்கும் இடங்களை வீட்டில் இருந்தவாறே உரியவர்கள் கண்காணிக்கலாம். இதனால் குழந்தைகள், முதியோர் காணாமல் போனல் அவர்களை மீட்பது எளிதாகும். இந்த கண்டுபிடிப்பை தோழிகள் லத்திகா, கவிதா உடன் இணைந்து உருவாக்கினோம்.
குறைந்த செலவில் மீட்பு உபகரணம்
மகாலட்சுமி, அரசு மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம்:இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. சில இடங்களில் குழந்தைகள் மீட்க இயலாமல் இறக்கின்றனர்.
இதனை தவிர்க்க குறைந்த செலவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவியை உருவாக்கினோம்.அதன்படி ஆசிரியர் ஆலோசனையுடன் குறைந்த செலவில் ஆழ்துறை கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் கருவியை தயாரித்தோம்.
இந்த கருவியில் மின் விளக்கு, கேமராவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை கொண்டு 100அடி துாரம் வரை மீட்பு பணிகள் செய்ய இயலும். இந்த கருவியை தயாரிக்க ரூ. 2500 வரை செலவானது.