/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனி தொகுதி ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார்; பாதுகாப்பு பணியில் 1076 போலீசார் குவிப்பு தேனி தொகுதி ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார்; பாதுகாப்பு பணியில் 1076 போலீசார் குவிப்பு
தேனி தொகுதி ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார்; பாதுகாப்பு பணியில் 1076 போலீசார் குவிப்பு
தேனி தொகுதி ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார்; பாதுகாப்பு பணியில் 1076 போலீசார் குவிப்பு
தேனி தொகுதி ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார்; பாதுகாப்பு பணியில் 1076 போலீசார் குவிப்பு
ADDED : ஜூன் 04, 2024 06:12 AM

தேனி : தேனி லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஓட்டு எண்ணும் மையத்தில் 1076 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடந்தது. தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான்(தனி) ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் வாக்காளர்களாக ஆண்கள் 7.95 லட்சம் பேர், பெண்கள் 8.24 லட்சம், இதரர் 218 என மொத்தம் 16, 20,419 பேர் இருந்தனர். தேனி தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்பட 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தொகுதியில் உள்ள 1788 ஓட்டுச்சாவடிகளில் தலா இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவில் ஆண்கள் 5.51 லட்சம், பெண்கள் 5.81 லட்சம், இதரர் 54 பேர் என 11,33,950 பேர் என 69.84 சதவீத ஓட்டுகளை பதிவானது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் இயந்திரங்கள் கொடுவிலார்ப்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லுாரிகள் வளாகத்தில் சட்டசபை தொகுதி வாரியாக தனித்னியே வைக்கப்பட்டது. அங்கு போலீசார், துணை ராணுவப்படையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. வளாகத்தில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இன்று ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு கல்லுாரி, வளாகத்தில் எஸ்.பி., தலைமையில் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் என 1076 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா, பார்வையாளர் கவுரங்பாய் மக்வானா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிக்கின்றனர். இப்பணிக்காக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், நுண்மேற்பார்வையாளர்கள் 306 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தாசில்தார் நிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எண்ணும் டேபிளுக்கு கொண்டு வர கிராம உதவியாளர்கள் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் அதிகாலை 5:30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருக்க வேண்டும்.
ஒரு வேட்பாளருக்கு ஏஜன்டுகளாக தொகுதி வாரியாக தலா 15 பேர் வீதம் 90 பேர் நிமியக்கலாம். இதுவரை 1026 பேர் அனுமதி பெற்றுள்ளனர். ஏஜன்ட்டுகள் காலை 7:30 மணிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டு எண்ணிக்கைக்கு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கி 23 சுற்றுகளாக நடக்கிறது. ஒவ்வொரு சுற்றிலும் 14 டேபிள் அமைக்கப்பட்டு இயந்திரங்கள் எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்று முடிவையும் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படும்.
இது தவிர தபால் ஓட்டுகள் தனியாக எண்ணப்படுகிறது.