/உள்ளூர் செய்திகள்/தேனி/ 59,798 மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல் 59,798 மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்
59,798 மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்
59,798 மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்
59,798 மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்
ADDED : ஜூலை 30, 2024 06:11 AM
தேனி : அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், சமூக நலத்துறை சார்பில் இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். முதலாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக 4 செட் சீருடைகள் வழங்கப்பட்டது.
இந்த சீருடைகள் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் மாணவர்களுக்கு அளவு எடுத்து தைக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 763 அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 56,798 மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ.,க்கள் ஜான்சன், வசந்தா, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி, நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.