/உள்ளூர் செய்திகள்/தேனி/ முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 5 பேர் கைது முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 5 பேர் கைது
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 5 பேர் கைது
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 5 பேர் கைது
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 5 பேர் கைது
ADDED : ஜூலை 11, 2024 05:57 AM
தேவதானப்பட்டி: ஜி.கல்லுப்பட்டியில் அசாதாரண சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி வினோபா நகரை சேர்ந்த ரிசாத்ராஜ் 22. இவரதூ தந்தை செல்வம் 46. இருவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர்களுக்கும், வேறோரு சமுதாயத்தைச் சேர்ந்த வினோத்குமார் தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்தது. சில தினங்களாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிடுகின்றனர். இதனால் ஜி. கல்லுப்பட்டியில் சட்டம்- ஒழுங்கு பிரச்னையால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி. காமக்காபட்டியைச் சேர்ந்த வேல்முருகன் 28. கெங்குவார்பட்டியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் தனுஷ்குமார் 26. ராமர் 20.சந்தோஷ் 20. பரமன் 46 ஆகியோரை கைது செய்தனர்.-