ADDED : ஜூலை 29, 2024 12:22 AM
டிராக்டரில் மண் திருடியவர் கைது
தேனி: ராயப்பன்பட்டி எஸ.ஐ., அருண்பாண்டி, சிறப்பு எஸ்.ஐ., சையதுஇப்ராஹிம் தலைமையிலான போலீசார் காமயக்கவுண்டன்பட்டி முதல் சங்கிலி கருப்பசாமி கோயில் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதேப்பகுதி கூத்தனாட்சியம்மன் கோயில் தெரு அரவிந்தன் 28, டிராக்டரை ஓட்டி வந்தார். போலீசார் விசாரணையில் ஒரு யூனிட் காட்டுமண் திருடி விற்பனைக்காக கொண்டு செல்வதாக தெரிவித்தார். அரவிந்தனை கைது செய்த போலீசார், டிராக்டர், ஒரு யூனிட் மண்ணை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
சூதாடிய மூவர் கைது
தேனி: பெரியகுளம் கீழவடகரை பெருமாள்புரம் ராமகிருஷ்ணன் 43, என்.முருகன் 54, எம்.முருகன் 55, ஆகிய மூவர் பெருமாள்புரம் புளியந்தோப்பு அருகே சீட்டு வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். பெரியகுளம் எஸ்.ஐ., மலரம்மாள் தலைமையிலான போலீசார் மூவரையும் கைது செய்து, சீட்டுக்கட்டுகள், ரூ.250 பணத்தை கைப்பற்றி விசாரிக்கிறார்.
மது பதுக்கியவர் கைது
போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் ஈஸ்வரி காலனி சுப்ரமணி 72. இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தார். இவரை, போடி தாலுகா போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.