Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

ADDED : ஜூலை 01, 2024 05:49 AM


Google News
மது பதுக்கிய இருவர் கைது

போடி: சேதுபாஸ்கரன் தெரு தங்கராஜ் 48. இவர் சட்டவிரோத விற்பனைக்காக வினோபாஜி காலனியில் மது பாட்டில்களை பதுக்கினார். போடி மேலச்சொக்கநாதபுரம் காந்திஜி காலனி சுப்பிரமணி 72. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்தார். போடி தாலுகா போலீசார் தங்கராஜ், சுப்பிரமணி இருவரையும் கைது செய்து, 15 மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

விபத்து ஒருவர் காயம்

போடி: குலாலர் பாளையம் தண்ணீர் தொட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 59. இவரது மனைவி இந்துமதி 55. இருவரும் அமராவதி நகரில் இருந்து மெயின் ரோட்டிற்கு டூவீலரில் சென்றனர். எதிரே மெயின் ரோட்டில் இருந்து வந்த, டூவீலர் செல்வராஜ் ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் செல்வராஜ் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

மது பதுக்கியவர் கைது

போடி: சேது பாஸ்கரன் தெரு முதியவர் பாண்டி 70. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். போடி டவுன் போலீசார் முதியவரை கைது செய்து, 8 மது பாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

டூவீலர் விபத்தில் இருவர் காயம்

மூணாறு: தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் விஜய் 27, பாலா 28. இவர்கள் டூவீலரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோடு பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் விபத்தில் சிக்கியது. அதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். மூணாறு டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் முதலுதவி அளித்த பின், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நகை திருட்டு

தேனி: பாரஸ்ட்ரோடு வெங்டேஸ்வரி 35. இவரது மகன் சாய்குமார் வீட்டில் இருந்த போது பெண் ஒருவர் வீட்டிற்கு வந்தார். சாய்குமாரிடம் அவரது தாய் வெங்கடேஸ்வரி பற்றி விசாரிப்பது போல் வீட்டிற்குள் சென்று 2 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றார். தாய் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

தேனி: அரப்படித்தேவன்பட்டி ஆட்டோ டிரைவர் விவேக் 34. இவரது ஆட்டோவில் தேனி சிப்காட் பகுதியில் வசிக்கும் ஜெயபாரதி, அவரது தாய் வீரம்மாள் பயணித்தனர். தனியார் பர்னிச்சர் கடை அருகே வந்த போது முன்னாள் சென்ற வாகனத்தை, முந்திச் செல்ல முயன்ற போது ஆட்டோ கவிழ்ந்தது. இதில் டிரைவர் உட்பட மூவரும் காயமடைந்தனர். ஜெயபாரதி, வீரம்மாள் சிகிச்சைக்காக தேனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜெயபாரதி புகாரில் விவேக் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெஞ்சு வலியால் மெக்கானிக் பலி

தேனி: பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெரு சுப்பையா 44. இவர் குமுளி திண்டுக்கல் ரோட்டில் உள்ள தனியார் மில்லில் மெக்கானிக்காக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் பணிக்கு வந்த சுப்பையாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவி சின்னத்தாய் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us