செயல்பாட்டில் மஞ்சப்பை இயந்திரங்கள்
செயல்பாட்டில் மஞ்சப்பை இயந்திரங்கள்
செயல்பாட்டில் மஞ்சப்பை இயந்திரங்கள்
ADDED : ஜூலை 04, 2024 02:10 AM
தேனி: சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தை முன்னிட்டு தேனி பழைய பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக இரு தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிகழ்விற்கு கலெக்டர் ஷஜீனா தலைமை வகித்தார். மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 21 இடங்களில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.