ADDED : ஜூன் 07, 2024 06:37 AM
போடி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் இயற்பியல் கண்காட்சி கல்லூரி முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது.
இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜேஸ்வரி, உதவி பேராசிரியர் குபேரராஜா முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மணிகண்டன் வரவேற்றார். புவியீர்ப்பு அதிர்வை உணர்வும் கருவி, லேசர் பாதுகாப்பு கருவி, காற்றாலை, மின்சார வாகனங்கள், தீ தடுப்பு, மழையை உணரும் கருவிகள், சோலார் பேனல், மின்காந்த கருவிகள் கண்காட்சியில் அமைக்கப்பட்டன. ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.