ADDED : ஜூலை 26, 2024 12:15 AM

தேனி : தேனி நகராட்சி அலுவலகத்தில் அல்லிநகரம் புது குறிஞ்சி தெரு, பாண்டி கோயில் தெரு பொதுமக்கள் சார்பில் சவுமியா வழங்கிய மனுவில், இப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை சிலர் தங்களுக்கு சொந்தமான இடம் என அடைத்து விட்டனர்.
இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றோம்.
பாதை, சாக்கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரினார்.