/உள்ளூர் செய்திகள்/தேனி/ மது பார்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு மது பார்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
மது பார்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
மது பார்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
மது பார்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 23, 2024 06:29 AM

தேனி: கலெக்டர் அலுவுலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் தேனி, போடியில் மதுபான கூடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு வழங்கினர். கூட்டத்தில் 421 மனுக்கள் வழங்கப்பட்டன.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் முரளி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, வேலை வாய்ப்பு, மின் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
தேனி நகராட்சி 31வது வார்டு கவுன்சிலர் லதா தலைமையில் சடையால் தெரு குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், கரியன், ஜெயத்துறை வழங்கிய மனுவில், 'எங்கள் தெருவில் சடையால் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் தனியார் மதுபார் அமைய உள்ளதாக கூறுகின்றனர். மதுபார் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரினர்.
போடி ரெங்கநாதபுரம் பொதுமக்கள் சார்பாகவும், தனியார் பள்ளி சார்பாகவும் வழங்கிய மனுவில், 'எங்கள் பகுதியில் தனியார் மதுபார் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாணவிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இப்பகுதியில் ஏற்கனவே இருந்த அரசு மது பான கடையால் பல பிரச்னைகள் இருந்தது. தனியார் மதுபார் அமைவதை தடுக்க வேண்டும்'.
அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆறுமுகம் மனுவில், பள்ளியில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள், பொருட்களை உடைப்பதும், தண்ணீர் தொட்டிகளை சேதப்படுத்துவது, கொடி கம்பத்தையும் சேதப்படுத்துகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களும் செயல்படுகின்றன. இப்பள்ளியில் இரவு காவலரை நியமிக்க வேண்டும். அல்லிநகரம் கிராம கமிட்டி தலைவர் நாகராஜ், நிர்வாகிகள் முருகன், வீரமணி உடனிருந்தனர்.
தமிழ் மாநில காங்., மாவட்ட தலைவர் மகேந்திரன் மனுவில், 'தமிழக அரசு பால் விலை, சொத்துவரி, குடிநீர், பத்திரபதிவு கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது. இதனால் பொதுமக்கள், சிறுகுறு வியாபாரிகள், விசைத்தறி, நுாற்பாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரினர்'. உடன் மாநில இளைஞரணி செயலாளர் பிரபு உள்ளிட்ட நிர்வாகிள் பங்கேற்றனர்.