ADDED : மார் 14, 2025 06:12 AM
தேனி: தேனி எஸ்.பி., அலுவலகத்தில் ஹிந்து எழுச்சி முன்னணி நகரத்தலைவர் சிவராம் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், 'அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் தினமும் செல்கின்றனர்.
கோயிலுக்கு செல்ல திண்டுக்கல்-குமுளி பை பாஸ் ரோட்டினை கடந்து செல்ல வேண்டி உள்ளது. அந்த பகுதியில் அடிக்கடி விபத்து, உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கோயில் செல்லும் ரோடு, பை பாஸ் சந்திக்கும் பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என இருந்தது. மாவட்ட நிர்வாகி ராமமூர்த்தி உடனிருந்தனர்.