/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியாறு அணை நீர்மட்டம் 121 அடியாக குறைந்தது பெரியாறு அணை நீர்மட்டம் 121 அடியாக குறைந்தது
பெரியாறு அணை நீர்மட்டம் 121 அடியாக குறைந்தது
பெரியாறு அணை நீர்மட்டம் 121 அடியாக குறைந்தது
பெரியாறு அணை நீர்மட்டம் 121 அடியாக குறைந்தது
ADDED : ஜூலை 13, 2024 08:10 PM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஜூலை 2ல் 123.75 அடியாக இருந்தது. அதன் பின் மழையின்றி நீர்மட்டம் குறைந்து வந்தது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 121 அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரம் 152 அடி.
இந்நிலையில் நேற்று பெரியாறில் 26.2 மி.மீ., தேக்கடியில் 8.4 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 652 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1,100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2,826 மில்லியன் கன அடியாகும்.
தேனி, மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்கான நடவுப் பணிகள் பல இடங்களில் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் சில இடங்களில் நடவு தீவிரமாகியுள்ளது. நீர்மட்டம் குறைந்து வந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் நேற்று நீர்ப் பிடிப்பில் பகல் முழுவதும் மழை பெய்தது. இதனால் மீண்டும் நீர்மட்டம் உயருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். நீர் திறப்பை 800 கன அடியாக குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.