/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியகுளம் முகமூடி கொள்ளையன் மனைவி ஜாமின் மனு தள்ளுபடி பெரியகுளம் முகமூடி கொள்ளையன் மனைவி ஜாமின் மனு தள்ளுபடி
பெரியகுளம் முகமூடி கொள்ளையன் மனைவி ஜாமின் மனு தள்ளுபடி
பெரியகுளம் முகமூடி கொள்ளையன் மனைவி ஜாமின் மனு தள்ளுபடி
பெரியகுளம் முகமூடி கொள்ளையன் மனைவி ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 12, 2024 01:47 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:மதுரை, விருதுநகர், கோவை மாவட்டங்களில் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைதான பெரியகுளம் மூர்த்தியின் மனைவி அனிதா, உறவினர் நாகஜோதி ஆகியோரின் ஜாமின் மனுக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளிலும், நகர் விரிவாக்க பகுதிகளிலும் உள்ள வீடுகளை நோட்டமிட்டு தனி ஒருவனாக புகுந்து நகைகள் கொள்ளையடித்த முகமூடி திருடனை ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, கோவை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ராஜபாளையம் ஆண்டாள்புரத்தில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் ஜூன் 18ல் தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த அருண்குமார், சுரேஷ்குமார் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், கொள்ளை சம்பவங்களுக்கு தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மூர்த்தியின் தாய் சீனித்தாய், மனைவி அனிதா, உறவினர் நாகஜோதி, லட்சுமி, அருண்குமார், சுரேஷ்குமார் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மூர்த்தியை, கோவை போலீசார் ஒருவழக்கில் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின்கோரி மூர்த்தியின் மனைவி அனிதா, நாகஜோதி ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஜாமின் வழங்க அரசு வழக்கறிஞர் திருமலையப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.