Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இடுக்கியை மிரட்டிய மழை குறைந்ததால் மக்கள் நிம்மதி

இடுக்கியை மிரட்டிய மழை குறைந்ததால் மக்கள் நிம்மதி

இடுக்கியை மிரட்டிய மழை குறைந்ததால் மக்கள் நிம்மதி

இடுக்கியை மிரட்டிய மழை குறைந்ததால் மக்கள் நிம்மதி

ADDED : ஜூன் 28, 2024 12:19 AM


Google News
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் பருவ மழை ஜூன் 18ல் வலுவடைந்து கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. அதனால் மண், நிலச்சரிவு உள்பட பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்படும் என மக்கள் அஞ்சினர். இருப்பினும் சிறிய அளவில் மண்சரிவுகள் ஏற்பட்டன. மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை சற்று குறைந்தது. நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் சராசரி மழை 59.84 மி.மீ., பதிவானது. அதிகபட்சமாக பீர்மேடு தாலுகாவில் 99 மி.மீ., மழை பெய்தது. பிற தாலுகாக்கள் தேவிகுளம் 75.4, உடும்பன்சோலை 27, இடுக்கி 54.4, தொடுபுழா 43.3 மி.மீ., மழை பதிவானது. மலங்கரா, பாம்ளா, கல்லார்குட்டி, ஹெட்ஒர்க்ஸ் ஆகிய சிறிய அணைகள் திறக்கப்பட்டன.

படகு சவாரி உள்பட நீர் நிலைகளில் பொழுது போக்கு அம்சங்களுக்கும், டிரக்கிங் செல்லவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

மாவட்டத்தில் பிற பகுதிகளைவிட மூணாறில் மழை கொட்டி தீர்த்தது. ஜூன் 25ல் மட்டும் 16.1 செ.மீ., மழை பெய்ததால் மண்சரிவுகள் ஏற்பட்டன. அதில் மூணாறு காலனியில் குமார் மனைவி மாலா 39, இறந்தார்.

நேற்று முன்தினம் முதல் மழை சற்று குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மூணாறில் 3.5 செ.மீ. மழை பதிவானது.

குழப்பம்: மாவட்டத்தில் மழை அதிகரிக்கும்பட்சத்தில் இரவு பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதேசமயம் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் இருந்து தேனிக்கு கேப் ரோடு வழியாக இரவில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு வாகனங்களை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்துகின்றனர்.

அத்தகவலை முன்கூட்டியே தெரிவிக்காததால் அறியாமல் செல்லும் வாகனங்களை தேவிகுளத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். அதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us