தமிழை தவிர்த்த கடைகளுக்கு அபராதம்
தமிழை தவிர்த்த கடைகளுக்கு அபராதம்
தமிழை தவிர்த்த கடைகளுக்கு அபராதம்
ADDED : ஜூன் 13, 2024 06:42 AM
தேனி: மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, தொழிலாளர்நலத்துறை உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் சங்கர் தலைமையில் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் சொற்கள் இல்லாமல் பெயர் பலகை வைத்திருந்ததற்காக மதுராபுரி விலக்கில் உள்ள 3 கடைகள், தேனி பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு கடை என 4 கடைகளுக்கு அபராதம் விதித்தனர். ஆய்வு நடந்து வருவதால் தமிழ் இன்றி பெயர் பலகை வைத்துள்ள கடைகளுக்கு தொடர் அபராதம் விதிக்க உள்ளதாக தெரிவித்தனர்.