/உள்ளூர் செய்திகள்/தேனி/ பரோட்டா மாஸ்டர் கிணற்றில் விழுந்து தற்கொலை பரோட்டா மாஸ்டர் கிணற்றில் விழுந்து தற்கொலை
பரோட்டா மாஸ்டர் கிணற்றில் விழுந்து தற்கொலை
பரோட்டா மாஸ்டர் கிணற்றில் விழுந்து தற்கொலை
பரோட்டா மாஸ்டர் கிணற்றில் விழுந்து தற்கொலை
ADDED : ஜூலை 18, 2024 05:08 AM
பெரியகுளம், : பெரியகுளம் அருகே கடன் பிரச்னை குடும்பத் தகராறில் பரோட்டா மாஸ்டர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் வ.உ.சி., தெரு பரோட்டா மாஸ்டர் மாரிமுத்து 50. இவரது மனைவி சாந்தியிடம் 42. கடன், குடும்பத் தகராறு காரணமாக மாரிமுத்து கோபித்துக் கொண்டு இரு தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் செல்லாண்டி அம்மன் கோயில் எதிரே 30 அடி ஆழம் உள்ள தண்ணீருள்ள கிணற்றில் நேற்று காலை 11:00 மணிக்கு மாரிமுத்து முகத்தில் ரத்தகாயத்துடன் இறந்த நிலையில் மிதந்து கிடந்தார். பெரியகுளம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.