கடையை சேதப்படுத்திய படையப்பா யானை
கடையை சேதப்படுத்திய படையப்பா யானை
கடையை சேதப்படுத்திய படையப்பா யானை
ADDED : ஜூன் 14, 2024 05:35 AM

மூணாறு: மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் காப்பி ஸ்டோர் பகுதியில் ரோட்டோரக் கடையை படையப்பா யானை சேதப்படுத்தியது.
மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் வலம் வரும் படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு வாரமாக தனது வழித்தடத்தில் ' பினிஷிங் பாய்ண்ட்' டான மறையூர் அருகே பாம்பன்மலை பகுதியில் முகாமிட்டது.
பாம்பன்மலையைச் சேர்ந்த பரமசிவன் 48, ரஞ்ஜித் 35, ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கால்நடைகளுக்கு புல் சேகரித்துக் கொண்டு டூ வீலரில் சென்றனர். அப்போது பாம்பன்மலை ரோட்டில் படையப்பா எதிரே வந்ததால் அச்சமடைந்த இருவரும் டூவீலரை கீழே போட்டு விட்டு ஓடி உயிர் தப்பினர். டூவீலரில் இருந்த புல்லை படையப்பா நிதானமாக அசை போட்டு தின்றது.
சேதம்: மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் நேற்று பகலில் நடமாடிய படையப்பா காப்பிஸ்டோர் பகுதியில் பாம்பன்மலையைச் சேர்ந்த பழனிசாமி ரோட்டோரம் வைத்திருந்த கடையை சேதப்படுத்தியது. அதனுள் வைத்திருந்த மாம்பழம் உள்பட பல்வேறு பழங்களை தின்றது. அப்போது சிறிது நேரம் ரோட்டில் படையப்பா நடமாடியதால் போக்குவரத்து தடைபட்டது.