/உள்ளூர் செய்திகள்/தேனி/ சாக்கை அகற்றி இயல்புக்கு திரும்பிய படையப்பா யானை சாக்கை அகற்றி இயல்புக்கு திரும்பிய படையப்பா யானை
சாக்கை அகற்றி இயல்புக்கு திரும்பிய படையப்பா யானை
சாக்கை அகற்றி இயல்புக்கு திரும்பிய படையப்பா யானை
சாக்கை அகற்றி இயல்புக்கு திரும்பிய படையப்பா யானை
ADDED : ஜூலை 07, 2024 02:40 AM

மூணாறு: தந்தங்களில் சிக்கிய பிளாஸ்டிக் சாக்கை தாமாக அகற்றிய படையப்பா இயல்பு நிலைக்கு திரும்பியது.
மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை கடந்த பத்து நாட்களாக செண்டுவாரை எஸ்டேட் லோயர் டிவிஷன் பகுதியில் முகாமிட்டது. அப்பகுதியில் சுற்றித்திரிந்தபோது படையப்பாவின் முக்கிய அடையாளமான நீண்ட தந்தங்களின் இடையே பிளாஸ்டிக் சாக்கு சிக்கிக் கொண்டது.
அதனால் துதிக்கையை மேல் நோக்கி தூக்கவும் தந்தங்களில் துதிக்கையை தொங்க விடவும் இயலாமல் திண்டாடியது. சாக்கை அகற்ற பல்வேறு வகையில் முயன்ற படையப்பா இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கோயிலின் சுவற்றில் உரசி சாக்கை அகற்றியது.
அதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய படையப்பா அப்பகுதியில் வாழை, காய்கறி சாகுபடி ஆகியவற்றை சேதப்படுத்தியது.