/உள்ளூர் செய்திகள்/தேனி/ மதுபார் அமைக்க எதிர்ப்பு; ஹிந்து எழுச்சி முன்னணி மனு மதுபார் அமைக்க எதிர்ப்பு; ஹிந்து எழுச்சி முன்னணி மனு
மதுபார் அமைக்க எதிர்ப்பு; ஹிந்து எழுச்சி முன்னணி மனு
மதுபார் அமைக்க எதிர்ப்பு; ஹிந்து எழுச்சி முன்னணி மனு
மதுபார் அமைக்க எதிர்ப்பு; ஹிந்து எழுச்சி முன்னணி மனு
ADDED : ஜூலை 19, 2024 06:38 AM

தேனி : தேனி நகராட்சி 31வது வார்டில் சடையால் கோயில் உள்ளது. இங்குள்ள திட்டச்சாலையில் இரும்புக்கடை அருகே அரசு அனுமதி பெற்ற தனியார் மதுபார் துவங்க பணி நடந்து வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து எழுச்சி முன்னணி நகர அமைப்பாளர் முத்துராஜ், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தேனி கலெக்டர் அலுவலக கலால்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
சடையால் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பார் இடையூறாக அமையும். இப் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் இதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உடன் தேனி நகர பொதுச் செயலாளர் சிவராமன், துணைத் தலைவர்கள் நாகராஜ் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.