ADDED : ஜூன் 29, 2024 05:00 AM
தேவதானப்பட்டி : கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி 47. அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரபு 43. தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல ஆலோசகராக தற்காலிக பணிபுரிந்து வருகிறார்.
வீடுகளுக்கு செல்வதற்கு பாதை காரணமாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் பிரபு பழனிசாமி மகன் மருதுவை 17, பைப்பினால் அடித்துள்ளார். தடுக்க வந்த பழனிசாமிக்கு அரிவாளால் வெட்டு விழுந்தது. தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் பிரபுவை கைது செய்தனர்.