/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரயில் விபத்தில் மூதாட்டி, 6 ஆடுகள் பலி ரயில் விபத்தில் மூதாட்டி, 6 ஆடுகள் பலி
ரயில் விபத்தில் மூதாட்டி, 6 ஆடுகள் பலி
ரயில் விபத்தில் மூதாட்டி, 6 ஆடுகள் பலி
ரயில் விபத்தில் மூதாட்டி, 6 ஆடுகள் பலி
ADDED : ஜூன் 17, 2024 12:10 AM
ஆண்டிபட்டி : மதுரை - போடி அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டத்தில் ஆண்டிபட்டி டி.பொம்மிநாயக்கன்பட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி, 6 ஆடுகளுடன் பலியானார்.
தண்டவாளங்களில் ஏற்படும் அதிர்வு அழுத்தங்களை கண்டறியும் தானியங்கி தொழில்நுட்ப ரயில், நேற்று பிற்பகல் மதுரையில் இருந்து புறப்பட்டு போடி சென்றது. மாலை போடியில் இருந்து புறப்பட்டு ஆண்டிபட்டி வழியாக மதுரை சென்றது. டி.பொம்மிநாயக்கன்பட்டி அருகே சென்ற போது தண்டவாளத்தில் இருந்த ஆறு ஆடுகளை அங்கிருந்து விரட்ட முயன்ற அதேபகுதி காந்தி நகர் மூதாட்டி மீனாட்சி 59, ஆறு ஆடுகளுடன் ரயிலில் சிக்கி பலியானார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.