/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனியில் மரம் வெட்டுவதை தடுக்க நுாதன போராட்டம் தேனியில் மரம் வெட்டுவதை தடுக்க நுாதன போராட்டம்
தேனியில் மரம் வெட்டுவதை தடுக்க நுாதன போராட்டம்
தேனியில் மரம் வெட்டுவதை தடுக்க நுாதன போராட்டம்
தேனியில் மரம் வெட்டுவதை தடுக்க நுாதன போராட்டம்
ADDED : ஜூலை 31, 2024 06:07 AM

தேனி : தேனியில் ரோட்டோர மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னார்வலர்கள் மாலை, படையல் வைத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி -பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கேட் முதல் பொம்மையகவுண்டன்பட்டி வரை போக்குவரத்திற்கு இடையூராக உள்ள 23 மரங்கள் மாநில நெடுஞ்சாலைத்துறையால் வெட்டுவதற்கு ஏலம் விடப்பட்டு, வெட்டும் பணி நடந்தது. மரங்களை வெட்டுவதற்கு தன்னார்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேனி நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராம்ராஜ் தலைமையிலானவர்கள் வெட்டுவதற்கு குறிக்கப்பட்ட மரத்திற்கு பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபட முயன்றனர்.நுாதன போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, தேனி டி.எஸ்.பி., பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் மரங்கள் நடவு செய்து பராமரிப்பது, நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கி வந்தால் மரம் வெட்டும் பணியை நிறுத்துவது என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்நது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.