Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கண்காணிப்பு  மாவட்டத்தில் 900 ரவுடிகள் ‛'கூகுள்' வரைபடம் மூலம்  போலீஸ் விசாரணைக்கு உதவும் தொழில்நுட்ப பட்டியல்

கண்காணிப்பு  மாவட்டத்தில் 900 ரவுடிகள் ‛'கூகுள்' வரைபடம் மூலம்  போலீஸ் விசாரணைக்கு உதவும் தொழில்நுட்ப பட்டியல்

கண்காணிப்பு  மாவட்டத்தில் 900 ரவுடிகள் ‛'கூகுள்' வரைபடம் மூலம்  போலீஸ் விசாரணைக்கு உதவும் தொழில்நுட்ப பட்டியல்

கண்காணிப்பு  மாவட்டத்தில் 900 ரவுடிகள் ‛'கூகுள்' வரைபடம் மூலம்  போலீஸ் விசாரணைக்கு உதவும் தொழில்நுட்ப பட்டியல்

ADDED : ஜூன் 06, 2024 04:05 AM


Google News
மாவட்டத்தில் பொது இடங்களில் அவதுாறாக பேசி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்றவாளிகள் முதல் கொலை வழக்கு குற்றவாளிகளின் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் வசிக்கும் இடங்கள், முகவரி, அவர்களின் விரல்ரேகை பதிவுகள் உள்ளடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒரே மாதிரியான தொடர் குற்றங்களில் ஈடுபடுபடுவோர், மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தீங்கிழைக்கும் குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வரும் குற்றவாளிகள், 110 விதிமுறையின் படி கோட்டாட்சியர், தாசில்தார் முன்னணியில் ஒப்புதல் படிவம் அளித்த பின்பும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆகியோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டும் 900 ரவுடிகள் பட்டியலில் இணைக்கப்பட்டு, அவர்களின் தினசரி நடவடிக்கைகள் போலீசாரால் கண்காணிக்கப்படுகின்றனர். இவ்வாறு ரவுடிகளை கண்காணிப்பதில் புதிய முயற்சியாக தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவில், கூகுள் உதவியுடன், ரவுடிகள் வசிக்கும் வீடு, முகவரி உள்ளிட்ட விபரங்கள் கூகுள் வரைபடத்தில் தயாரித்து தினசரி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீசார் கூறுகையில், புதிய தொழில்நுட்ப வரைபட விபரங்களை வைத்து தினசரி விசாரணை அதிகாரி தலைமையிலான போலீசார் ரோந்து சென்று ரவுடிகளை தொடர்ந்து கண்காணிப்பர்.

இதனால் உரிய இடத்தில் ரவுடி இல்லாத போதும், அவர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது குறித்து எளிதாக கண்டறிய முடியும். இதனால் மாவட்டத்திலும் குற்றச்சம்பவங்கள் குறைய வாய்ப்புகள், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவும் ', என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us