/உள்ளூர் செய்திகள்/தேனி/ வளரிளம் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை வளரிளம் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை
வளரிளம் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை
வளரிளம் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை
வளரிளம் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : ஜூலை 07, 2024 02:37 AM
கம்பம்: வளரிளம் பெண்கள் 10 முதல் 19 வயது வரை உள்ள மாணவிகளுக்கு அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து குறைபாட்டால் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்கள் உருவாகிறது. தற்போது 10 முதல் 19 வயது வரையிலான படிக்கும் மாணவிகளை பள்ளியில் சந்தித்து, அவர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையமும் ஒவ்வொரு வாரம் வியாழக் கிழமை ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ரத்தம், சிறுநீர், கண், இதயம் உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளையும் மேற்கொள்ளப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது. கிராம செவிலியர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சின்னமனூர் வட்டாரத்தில் மருத்துவ அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் ஒடைப்பட்டி, எரசக்கநாயக்கனுார், சின்னமனூர், குச்சனூர், குப்பனாசாரிபட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வளரிளம் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.