ADDED : மார் 12, 2025 06:47 AM
கூடலுார்: கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 63.
இவரது காரை நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு முன் நிறுத்தி விட்டு காலையில் பார்த்தபோது கார் கண்ணாடி உடைந்திருந்தது. இதே போல் இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மாரீஸ்வரன் என்பவர் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தபோது இதே ஊரைச் சேர்ந்த தேவா 49, கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது.
இவரை கூடலுார் வடக்கு போலீசார் கைது செய்தனர்.