/உள்ளூர் செய்திகள்/தேனி/ மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2600க்கு கொள்முதல் தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி குறைவு மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2600க்கு கொள்முதல் தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி குறைவு
மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2600க்கு கொள்முதல் தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி குறைவு
மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2600க்கு கொள்முதல் தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி குறைவு
மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2600க்கு கொள்முதல் தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி குறைவு
ADDED : ஜூன் 22, 2024 05:52 AM

தேனி: தேனி ஒன்றியம், தப்புக்குண்டு பகுதியில் மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2600க்கு விற்பனையானது. பெரியார் வாய்க்காலில் நீர் வரத்து குறைந்ததால் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தேனி ஒன்றியத்தில் மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி நடைபெறும். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.
தப்புக்குண்டு விவசாயி தனபாலன் 60, தனது 2 ஏக்கரில் மககாச்சோளம் பயிரிட்டு இருந்தார். தண்ணீர் தட்டுப்பாட்டால் விளைச்சல் குறைந்து மொத்தம் 18 குவிண்டால் மகசூல் கிடைக்க வேண்டியதில் தற்போது 14 குவிண்டால் கிடைத்துள்ளது.
ஈரோடு, பெருந்துரை, நாமக்கல் பகுதி வியாபாரிகள் பிராய்லர் கோழி தீவனத்திற்காக குவிண்டால் ரூ.2600க்கு கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயி தனபாலன் கூறியதாவது: இப் பகுதியில் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் பெரியார் கால்வாய் மூலம் தட்டுப்பாடு இன்றி கிடைத்தது.
இரு ஆண்டுகளாக வழங்கிய குறைந்தளவு நீரால் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இப் பகுதியில் 160 எக்டேரில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஒரு குவிண்டால் ரூ.3 ஆயிரம் கொள்முதல் செய்தனர். தற்போது ரூ.2600க்கு விற்பனையாகிறது. இந்த விலை கட்டுபடியாது.
ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவழித்துள்ளேன் . ஏக்கருக்கு ரூ.32 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது கவலையாக உள்ளது. வேளாண் துறை மக்காச்சோள சாகுபடிக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.', என்றார்.