ADDED : ஜூலை 14, 2024 03:53 AM
மூணாறு : பழைய மூணாறில் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்ட தனியார் ஓட்டலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூட்டினர்.
மூணாறில், தேவிகுளம் தாலுகா உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆல்மேரி தலைமையில் அதிகாரிகள் ஓட்டல்களில் ஆய்வு நடத்தினர்.
அதில் பழைய மூணாறில் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்ட ஆண்டுகள் ஓட்டலை பூட்டியதுடன், அங்கு பயன்படுத்திய எண்ணை, பால் உள்பட உணவு பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அதன்பிறகு பழைய மூணாறு அரசு உயர் நிலை பள்ளியில் மாணவர்களுக்கு உணவுகளின் தரம், நிறம், கலப்படம் ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன.