ADDED : ஜூன் 25, 2024 12:15 AM
போடி: போடி அருகே வினோபாஜி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் 54.
இவர் அப்பகுதியில் வீட்டு மனைக்கான காலி இடத்தை விலைக்கு வாங்கி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சின்னன் 67. என்பவர் தனக்கும் அந்த இடத்தில் பங்கு உள்ளது என கூறி இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த சின்னன், மணிகண்டனை கீழே தள்ளி, கடித்து காயம் ஏற்படுத்தி உள்ளார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.