/உள்ளூர் செய்திகள்/தேனி/ நீதிபதிகள் பணியிடம் நிரப்ப வழக்கறிஞர்கள் மனு நீதிபதிகள் பணியிடம் நிரப்ப வழக்கறிஞர்கள் மனு
நீதிபதிகள் பணியிடம் நிரப்ப வழக்கறிஞர்கள் மனு
நீதிபதிகள் பணியிடம் நிரப்ப வழக்கறிஞர்கள் மனு
நீதிபதிகள் பணியிடம் நிரப்ப வழக்கறிஞர்கள் மனு
ADDED : ஜூன் 19, 2024 05:02 AM
பெரியகுளம், : பெரியகுளம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர் சங்கத்தினர் சரவணக்குமார் எம்.எல்.ஏ., விடம் மனு கொடுத்தனர்.
பெரியகுளம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாகவும், சார்பு நீதிமன்றத்தில் சில மாதங்களாக நீதிபதிகள் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பெரியகுளம் வழக்கறிஞர்கள், வழக்கு கொடுத்துள்ள பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். பெரியகுளத்திற்கு கூடுதல் குடும்ப நலம் நீதிமன்றமும், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் நுகர்வோர் நீதிமன்றம் இடப்பற்றாக்குறை காரணமாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கவும், பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பகுதியில் செயல்பட்டு வந்த போஸ்ட் ஆபீஸ் தற்போது சுதந்திர வீதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனை மீண்டும் நீதிமன்றம் வளாகத்தில் கொண்டு வரவேண்டும். நீதிமன்றம் ஸ்டாம்புகள், முத்திரை தாள் பற்றாக்குறை தட்டுப்பாடு நிலவுகிறது சீராக கிடைக்கவும், நீதிமன்றம் வளாகத்தில் டூவீலர் ஸ்டாண்ட் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலாஜி, செயலாளர் நாராயணசாமி, வழக்கறிஞர்கள் சிவசுப்பிரமணியன், சிவகுமார் உட்பட வழக்கறிஞர்கள் சரவணக்குமார் எம்.எல்.ஏ., விடம் மனுக்கள் அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., தெரிவித்தார்.