ADDED : ஜூலை 10, 2024 05:01 AM

கூடலுார் : கூடலுார் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் 10, பிளஸ் 2- பொதுத் தேர்வில் சதம் எடுத்த மாணவர்களுக்கு அந்தந்த பாடப்பிரிவு ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்.
நடந்து முடிந்த அரசு பொது தேர்வில் கூடலுார் என்.எஸ்.கே.பி. பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த யார்த்தினி, சிவானிகா, முகிலன், நவீன், பிரணவ், குககிருஷ்ணா, ஹர்ஷவர்தன், திவ்யஸ்ரீ, அஸ்வந்த், பிளஸ் 2 வகுப்பில் படித்த பிடல் காஸ்ட்ரோ, பாண்டீஸ்வரி, சபரிஷா, நஜ்லாபேகம், முகமது சாகித் ஆகிய மாணவர்கள் கணிதம், அறிவியல், வணிகவியல், பொருளியல், கணினி பயன்பாடுகள் உள்ளிட்ட பாடங்களில் சதம் எடுத்தனர்.
இவர்களுக்கு தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் தலைமையில் அந்தந்த பாடப்பிரிவு ஆசிரியர்கள் தலா ரூ. 1000 பரிசு வழங்கி பாராட்டினர்.
மேலும் மாநில அளவில் சென்னையில் நடந்த தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்த இப்பள்ளி மாணவர் இன்பத்தமிழனை பாராட்டினர்.