/உள்ளூர் செய்திகள்/தேனி/ மனைவியை கொன்று நாடகம் காதல் கணவனுக்கு 'ஆயுள்' மனைவியை கொன்று நாடகம் காதல் கணவனுக்கு 'ஆயுள்'
மனைவியை கொன்று நாடகம் காதல் கணவனுக்கு 'ஆயுள்'
மனைவியை கொன்று நாடகம் காதல் கணவனுக்கு 'ஆயுள்'
மனைவியை கொன்று நாடகம் காதல் கணவனுக்கு 'ஆயுள்'
ADDED : ஜூலை 09, 2024 08:40 PM

தேனி:தஞ்சாவூர் மாவட்டம், சூரியம்பட்டி தெற்கு தெரு விவசாயி முருகேசன் மகன் கோவிந்தராஜ். இவர் 2020 அக்., 5ல் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
அதில், 'என் சகோதரி கவிதா, 31. இவர், 2011ல் சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு, தேனி மாவட்டம், காமயக்கவுண்டன்பட்டி கேப்டன் பிரபாகரன், 33, என்பவரும் பணிபுரிந்தார். இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்தனர். பின் தேனி மாவட்டம், காமயக்கவுண்டன்பட்டியில், இரு மகன்களுடன் வசித்தனர்.
மொபைல் போனில், 2020 அக்., 4ல் என்னிடம் பேசிய கேப்டன் பிரபாகரன், 'கழிப்பறையில் வழுக்கி விழுந்து பின்பக்க தலையில் காயம்பட்டு சகோதரி இறந்துவிட்டார்' என்றார்.
மறுநாள் கம்பம் அரசு மருத்துவமனையில் கவிதா உடலை பார்த்தோம். அதில் தலை, கண்களில் பலத்த காயம் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்க கோரி புகார் வழங்கினேன்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், கவிதாவை தலையில் தாக்கி கொலை செய்தது உறுதியானது. இதனால் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கேப்டன் பிரபாகரனை கைது செய்தனர்.
மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி அனுராதா வழக்கை விசாரித்து கேப்டன் பிரபாகரனுக்கு ஆயுள் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.