Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்று வேலை வாய்ப்பு முகாம்

இன்று வேலை வாய்ப்பு முகாம்

இன்று வேலை வாய்ப்பு முகாம்

இன்று வேலை வாய்ப்பு முகாம்

ADDED : ஜூலை 19, 2024 06:26 AM


Google News
தேனி : மாவட்ட வேலை வாய்ப்பு - தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (ஜூலை 19ல்) நடக்க உள்ளது.' என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: இம் முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று, காலிப் பணியிடங்களுக்கு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். 10ம் வகுப்பு, அதற்கு கீழ் கல்வித் தகுதியாக உள்ளவர்கள், பிளஸ் 2, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு, இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்புகள், பொறியியல் படிப்புகள் படித்தவர்கள், தையல் பயிற்சி முடித்தவர்கள் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு 04546 254510, 94990 55936 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us