/உள்ளூர் செய்திகள்/தேனி/ குறைதீர் கூட்ட மனுக்கள் பதிவு செய்வதில் குளறுபடி; கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் அவதி குறைதீர் கூட்ட மனுக்கள் பதிவு செய்வதில் குளறுபடி; கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் அவதி
குறைதீர் கூட்ட மனுக்கள் பதிவு செய்வதில் குளறுபடி; கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் அவதி
குறைதீர் கூட்ட மனுக்கள் பதிவு செய்வதில் குளறுபடி; கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் அவதி
குறைதீர் கூட்ட மனுக்கள் பதிவு செய்வதில் குளறுபடி; கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் அவதி
ADDED : ஜூன் 25, 2024 12:15 AM

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் பதிவு செய்ய தாமதம் ஆனதால் வரிசையில் நின்ற பொதுமக்கள், முதியோர் அவதியடைந்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மார்ச் 18 முதல் ஜூன் 3 வரை மக்கள் குறை தீர் கூட்டம் நடக்கவில்லை. குறைதீர் கூட்டம் மீண்டும் ஜூன் 10 ல் நடந்தது. அன்று குறைவான பொதுமக்கள் மனு அளித்தனர். கடந்தவாரம் அரசு விடுமுறை என்பதால் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கவில்லை. நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு வழங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அதிகம் வந்திருந்தனர்.
இதுவரை 3 இடங்களில் மட்டும் மனுக்கள் பதிவு செய்து வழங்கப்பட்டது. நேற்று புதிதாக 7 கணினிகள் அமைக்கப்பட்டு பதிவு செய்து வழங்கும் நடைமுறை பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் அதனை செயல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடியால் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தது பதிவு செய்தனர். பதிவு செய்ய சிலரை மட்டும் உள்ளே அனுமதித்த போலீசார் மற்ற பொதுமக்களை அனுமதிக்கவில்லை. மீண்டும் பழைய முறைப்படி ஜன்னல் வழியாக வாங்கி மனுக்கள் பதிவு செய்து வழங்கப்பட்டது. மனுக்கள் பதிவதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட துவங்கினர். பொதுமக்கள் குடிக்க வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தொட்டியிலும் குடிநீர் இல்லை. இதனால் பலர் அருகில் இருந்த கடைகள், அலுவலகங்களில் சென்று தண்ணீர் குடிக்கும் நிலை ஏற்பட்டது.