/உள்ளூர் செய்திகள்/தேனி/ 1.89 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணி தீவிரம்: மாநில அளவில் தேனி மாவட்டம் 5வது இடம் பெற்றது 1.89 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணி தீவிரம்: மாநில அளவில் தேனி மாவட்டம் 5வது இடம் பெற்றது
1.89 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணி தீவிரம்: மாநில அளவில் தேனி மாவட்டம் 5வது இடம் பெற்றது
1.89 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணி தீவிரம்: மாநில அளவில் தேனி மாவட்டம் 5வது இடம் பெற்றது
1.89 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணி தீவிரம்: மாநில அளவில் தேனி மாவட்டம் 5வது இடம் பெற்றது
ADDED : ஜூலை 11, 2024 05:38 AM

தேனி, ஜூலை 11- தேனி மாவட்டத்தில் உள்ள 1.89 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இதுவரை 29 ஆயிரம் மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆதார் புதுப்பிப்பதில் தேனி மாவட்டம் மாநில அளவில் 5வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணி அரசுப்பள்ளிகளில் ஜூன் 10ல் துவங்கியது.இப்பணிக்காக மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களிலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வட்டாரத்திற்கு ஒரு ஆதார் புதுப்பித்தல் கருவி வீதம் 8 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
அரசுப்பள்ளிகள் 530, உதவி பெறும் பள்ளிகள் 216, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 20, தனியார்பள்ளிகள் 174 என 940 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1,89, 582 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் முதல் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை அதாவது 5வயது முதல் 7 வயது வரை ஒரு பிரிவாகவும், பிளஸ்1, 2 மாணவர்களுக்கு 15 வயது முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் புதுப்பிக்கும் போது கருவிழி, கைரேகை, பெற்றோர் அலைபேசி எண்கள் பதிவேற்றப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் போது அவை ஒரே நாளில் அப்டேட் செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆதார் புதுப்பிக்க ஒரு வார காலமாகும்.
கல்வித்துறையினர் கூறுகையில், கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் நடந்த முகாமில் இதுவரை 29ஆயிரம் மாணவர்கள் ஆதார் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 25,977 மாணவர்கள் ஆதார் புதுப்பித்திருப்பது கண்டறியப்பட்டது.
இவர்கள் வங்கி கணக்கு துவக்குவது, அரசு உதவி தொகை பெறுவதற்காகவும், பெயர், முகவரி திருத்தங்களுக்காக புதுப்பித்துள்ளனர்.
பள்ளி முகாம்களில் புதிதாக 3ஆயிரம் மாணவர்கள் ஆதார் புதுப்பிக்கப்பட்டது. மாநில அளவில் பள்ளி மாணவர்கள் ஆதார் புதுப்பிப்பதில் தேனி மாவட்டம் 5வது இடத்தில் உள்ளது. மேலும் சில இடங்களில் இணைய வசதி உள்ளி்ட்ட காரணங்களால் புதுப்பிக்கும் பணி தாமதமாகிறது. தினமும் ஒவ்வொரு முகாமிலும் 20 முதல் 25 ஆதார் புதுப்பிக்கப்படுகிறது என்றனர்.