ADDED : ஜூலை 12, 2024 05:07 AM
தேனி: கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி செயலர் தாமோதரன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் மைதிலி வரவேற்றார். பயிற்சியில் வேலைவாய்ப்புகள், படிப்பின் முக்கியத்துவம்பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் சீனிவாசன், பேராசிரியர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பேசினர். என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றகள் நடவு செய்யப்பட்டது. முதலாமாண்டு மாணவர்கள், பேராசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.