/உள்ளூர் செய்திகள்/தேனி/ கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்
ADDED : ஜூன் 12, 2024 12:19 AM
தேனி : கால்நடைகளுக்கு கோமாரி நோய் 5 வது சுற்று தடுப்பூசி வழங்கும் முகாமினை கலெக்டர் ஷஜீவனா ஆண்டிப்பட்டி திருமலாபுரத்தில் துவக்கி வைத்தார்.
இம் முகாம் ஜூன் 30 வரை மாவட்டம் முழுவதும் நடக்கிறது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
முகாமில் கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கோவில்ராஜா, உதவி இயக்குனர்கள் பாஸ்கரன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.