/உள்ளூர் செய்திகள்/தேனி/ புது பஸ் ஸ்டாண்ட் சிக்னல் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல் புது பஸ் ஸ்டாண்ட் சிக்னல் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
புது பஸ் ஸ்டாண்ட் சிக்னல் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
புது பஸ் ஸ்டாண்ட் சிக்னல் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
புது பஸ் ஸ்டாண்ட் சிக்னல் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2024 05:47 AM

தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி மதுரை ரோட்டில் நடைபெறும் மேம்பால பணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அன்னஞ்சி விலக்கு சிவாஜிநகர் வழியாக புது பஸ் ஸ்டாண்ட், அரசு ஐ.டி.ஐ., வழியாக மதுரை ரோடு செல்கின்றன. மறு மார்க்கத்தில் புது பஸ் ஸ்டாண்ட், அரண்மனைபுதுார் விலக்கு வழியாக இயக்கப்படுகின்றன. இதில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நான்கு ரோடு சந்திப்பில் சிவாஜிநகர், அன்னஞ்சி விலக்கு, பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் வாகனங்கள் சந்திக்கின்றன.
போலீசார் நின்றாலும் வாகன ஓட்டிகள் விதிகளை மதிக்காமல் செல்வதால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது.
இதனை தவிர்க்க இப்பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புது பஸ் ஸ்டாண்ட் வரும் அனைத்து பஸ்களும் மேற்கு புற நுழைவாயில் வழியாக மட்டும் உள்ளே வரும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் சில மாதங்களுக்கு முன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வழியாக மட்டும் பஸ்கள் உள்ளே வந்தால், கலெக்டர் அலுவலக ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறையும்.