/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி ரயில்வே மேம்பால பணி பகுதியில் ரோடு வசதி செய்து தர வலியுறுத்தல் குறைதீர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., மனு தேனி ரயில்வே மேம்பால பணி பகுதியில் ரோடு வசதி செய்து தர வலியுறுத்தல் குறைதீர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., மனு
தேனி ரயில்வே மேம்பால பணி பகுதியில் ரோடு வசதி செய்து தர வலியுறுத்தல் குறைதீர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., மனு
தேனி ரயில்வே மேம்பால பணி பகுதியில் ரோடு வசதி செய்து தர வலியுறுத்தல் குறைதீர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., மனு
தேனி ரயில்வே மேம்பால பணி பகுதியில் ரோடு வசதி செய்து தர வலியுறுத்தல் குறைதீர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., மனு
ADDED : ஜூன் 11, 2024 11:59 PM

தேனி : தேனி ரயில்வே மேம்பால பணி நடக்கும் பகுதியில் ரோடுவசதி செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் கலெக்டரின் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகங்களில் திங்கள் தோறும் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். மார்ச் 16ல் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டதால் நேற்று முன்தினம் மீண்டும் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்புத்திட்ட தனி சப் கலெக்டர் முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மார்சிஸ்ட் கம்யூ., கட்சி தேனி தாலுகா குழு உறுப்பினர் வீரமணி தலைமையில் நிர்வாகிகள் வழங்கிய மனுவில் , தேனி புது பஸ் ஸ்டாண்டில் நடைபாதையில் டூவீலர்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும். பூங்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொதுக்கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். ரயில்வே மேம்பால பணி நடைபெறும் பகுதியில் ரோடு அமைத்து தர வேண்டும். என்றிருந்தது.
போடி மேலச்சொக்கநாதபுரம் ராமகிருஷ்ணன் மனுவில், போடி தாலுகாவில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் நிலம் அளவை தொடர்பாக மனு அளித்தேன். மனு வழங்கி 166 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தது.
முகாமில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண்டிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த சண்முகத்தாய், கிருஷ்ணவேணி வாரிசு தாரர்களுக்கு நிவாரணமாக தலா ரூ. ஒருலட்சம் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.96ஆயிரம் மதிப்புள்ள இணைப்பு சக்கரம் பொருத்திய டூவீலர்கள் 12 பேருக்கு வழங்கப்பட்டது.