/உள்ளூர் செய்திகள்/தேனி/ சிப்பம் கட்டும் அறை அமைக்க விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் மானியம் தோட்டக்கலை துறை அழைப்பு சிப்பம் கட்டும் அறை அமைக்க விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் மானியம் தோட்டக்கலை துறை அழைப்பு
சிப்பம் கட்டும் அறை அமைக்க விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் மானியம் தோட்டக்கலை துறை அழைப்பு
சிப்பம் கட்டும் அறை அமைக்க விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் மானியம் தோட்டக்கலை துறை அழைப்பு
சிப்பம் கட்டும் அறை அமைக்க விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் மானியம் தோட்டக்கலை துறை அழைப்பு
ADDED : ஜூன் 18, 2024 05:08 AM
கம்பம் : தோட்டங்களில் காய்கறிகளை தரம் பிரித்து விற்க தேவையான சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
தேனி தோட்டக்கலை மாவட்டமாகும்.. காய்கறி பயிர்கள், வாழை, திராட்சை, மா போன்ற பழப்பயிர்களும் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. தோட்டங்களில் சாகுபடியாகும் முள்ளங்கி, பீட்ரூட், முட்டைகோஸ், நூல்கோல், தக்காளி உள்ளிட்ட பல காய்கறிகளை பறிக்கும் போது மண் ஒட்டி சுத்தமில்லாமல் இருக்கும். - மேலும் தரம் பிரிக்காமல் இருக்கும்.
எனவே தோட்டங்களில் இதற்கென சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.2 லட்சம் மானியம் வழங்குவதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. இதில் 30க்கு 20 அளவில் அறை இருக்க வேண்டும். தரம் பிரிக்கும் மேஜை, தண்ணீர் வசதி, ஆறு ஜன்னல்கள், மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும். 600 சதுர அடியில் கட்டப்பட வேண்டும். கட்டுவதற்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களுக்கும் 70 சிப்பம் கட்டும் அறை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கம்பத்திற்கு 10 சிப்பம் கட்டும் அறைகள் கட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாக உதவி இயக்குநர் பாண்டியன் ராணா கூறியுள்ளார். விரும்பும் விவசாயிகள் அந்தந்த உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.