மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை
மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை
மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை
ADDED : ஜூன் 07, 2024 06:42 AM

போடி: போடி பகுதியில் நேற்று மதியம் பலத்த காற்று, மின்னலுடன் கன மழை பெய்தது. போடி பகுதியில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு போடி, குரங்கணி, கொட்டகுடி, சிலமலை, சூலப்புரம் உள்ளிட்ட பகுதியில் இடியுடன் பெய்த கன மழையால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது. போடி காமராஜ் பஜார், போஜன் பார்க் உள்ளிட்ட மெயின் ரோட்டில் மழை நீர் ஓடை போல பெருக்கெடுத்து சென்றது. குரங்கணி மலை பகுதியில் பெய்த மழையால் கொட்டகுடி ஆற்று பகுதியில் நீர் வர துவங்கியது. மதியம் 3.45 மணி வரை மழை நீடித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியகுளம், தேனி பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
ஆண்டிபட்டி: பகுதியில் மாலை 3 மணிக்கு மின்னல், இடி, காற்றுடன் துவங்கிய மழை ஒரு மணி நேரம் நீடித்தது. பலத்த மழைக்குப் பின் சாரல் மழை ஒரு மணி நேரம் பெய்தது. கடந்த சில வாரங்களில் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து இருந்தனர். கோடை உழவு செய்த நிலங்களில் தற்போது பெய்துள்ள மழை ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. நிலத்தடி நீர் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.