ADDED : ஜூன் 11, 2024 07:15 AM
தேவதானப்பட்டி : சில்வார்பட்டி முனையடுவ நாயனார் கோயிலில் சேக்கிழார் நாயனார் குருபூஜை நடந்தது. விநாயகர், முருகன், அதிகார நந்தி பகவான், காசி விஸ்வநாதர், முனையடுவ நாயனார், நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத் பவர், துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஞ்சள் பொடி, மா பொடி, திருமஞ்சன திரவியம், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகம் நடந்தது. சேக்கிழார் நாயனார் வாழ்க்கை வரலாறு ஆன்மிகசொற்பொழிவு நடந்தது.
சிவனடியார்களுக்கு மகேஸ்வர பூஜை அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குருபூஜையை மாணிக்கம் குடும்பத்தினர் செய்திருந்தனர்.