/உள்ளூர் செய்திகள்/தேனி/ அதிகாரிகளின் அலட்சியத்தால் மனைவியை இழந்த அரசு ஊழியர் அதிகாரிகளின் அலட்சியத்தால் மனைவியை இழந்த அரசு ஊழியர்
அதிகாரிகளின் அலட்சியத்தால் மனைவியை இழந்த அரசு ஊழியர்
அதிகாரிகளின் அலட்சியத்தால் மனைவியை இழந்த அரசு ஊழியர்
அதிகாரிகளின் அலட்சியத்தால் மனைவியை இழந்த அரசு ஊழியர்
ADDED : ஜூன் 29, 2024 04:39 AM
மூணாறு, : தேவிகுளத்தில் ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்பை வழங்காதால் அரசு ஊழியர் மண் சரிவில் மனைவியை இழந்த சோகம் தெரிய வந்தது.
தேவிகுளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலத்தில் எழுத்தராக பணியாற்றும் குமார், மூணாறில் லட்சம் காலனியில் குடும்பத்துடன் வசித்தார். அவர் வசித்த வீடு பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதால் அரசு குடியிருப்பு ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தார். அவருக்கு தேவிகுளத்தில் பொதுபணித்துறை சார்பில் 2023ல் குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. அந்த குடியிருப்பில் இடமலை குடி ஊராட்சி அலுவலக ஊழியர்கள் தங்கி இருந்ததால் குமாருக்கு குடியிருப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
தனக்கு ஒதுக்கிய குடியிருப்பை வழங்ககோரி அவர் உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பயனின்றி போனது.
இந்நிலையில் குமார் எண்ணியது போன்று துயர சம்பவம் ஜூன் 25ல் நிகழ்ந்தது. அன்று பெய்த மழையில் மண்சரிந்து குமாரின் வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி மாலா 39, மண்ணிற்குள் புதைந்து இறந்தார்.
அதனையடுத்து தேவிகுளத்தில் குமாருக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் இருந்தவர்களை நேற்று முன்தினம் அவசரமாக காலி செய்தனர். அதனை முன்கூட்டியே அதிகாரிகள் செய்து இருந்தால் உயிர் பலியை தடுத்திருக்கலாம். தற்போது மூன்று பிள்ளைகளுடன் குமார் நிர்கதியாய் நிற்கும் சூழல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.