/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஓடைப்பட்டியில் எரிவாயு தகன மேடை அரசுக்கு அறிக்கை தாக்கல் ஓடைப்பட்டியில் எரிவாயு தகன மேடை அரசுக்கு அறிக்கை தாக்கல்
ஓடைப்பட்டியில் எரிவாயு தகன மேடை அரசுக்கு அறிக்கை தாக்கல்
ஓடைப்பட்டியில் எரிவாயு தகன மேடை அரசுக்கு அறிக்கை தாக்கல்
ஓடைப்பட்டியில் எரிவாயு தகன மேடை அரசுக்கு அறிக்கை தாக்கல்
ADDED : ஜூன் 20, 2024 05:17 AM
தேனி: ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு பகுதியில் ரூ.1.43 கோடியில் எரிவாயு தகன மேடை அமைக்க அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சிப்பணிக்ளுக்காக அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்ப பட்டுள்ளது. அதில் வீரபாண்டி, ஓடைப்பட்டி, பி.மீனாட்சிபுரம், தேவாரம், சி.புதுப்பட்டி, பூதிப்புரம், மார்க்கையன்கோட்டை, மேலசொக்கநாதபுரம் ஆகிய பேரூராட்சிகளில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.9.65 கோடி மதிப்பில் 11.3 கி.மீ., ரோடு அமைக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி பேரூராட்சிகளில் எரிவாயு தகன மேடை உள்ளது. தற்போது ஒடைப்பட்டி பேரூராட்சி பகுதியில் ரூ.1.43 கோடி செலவில் எரிவாயு தகன மேடை அமைக்க அறிக்கை தயார் செய்து அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.