/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெட்டிக்கடையில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: கிராம மக்கள் மனு பெட்டிக்கடையில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: கிராம மக்கள் மனு
பெட்டிக்கடையில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: கிராம மக்கள் மனு
பெட்டிக்கடையில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: கிராம மக்கள் மனு
பெட்டிக்கடையில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: கிராம மக்கள் மனு
ADDED : ஜூன் 01, 2024 05:31 AM

தேனி: போடி தாலுகா ராசிங்காபுரம் அருகே கரியப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜவேல் உட்பட ஊர் பொது மக்கள் 200 பேர் வந்து தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் மனு வழங்கினர்.
மனுவில் கூறியிருப்பதாவது: கரியப்பகவுண்டன்பட்டியில் குறிப்பிட்ட சமூகத்தினர் 300 குடும்பத்தினர் வசிக்கிறோம். ஊர் செயலாளராக உள்ளேன். சமூக மக்களுக்கான திருமண மண்டபமும், அதில் ஆறு கடைகள் உள்ளன. அதில் ஒரு கடையில் அங்கு வசிக்கும் நபர், வாடகைக்கு எடுத்து 2 ஆண்டுகளாக பெட்டிக்கடை வைத்துள்ளார்.
அக்கடையில் 2 மாதங்களாக போதை வஸ்துகள், மது,புகையிலை, கஞ்சா, ஸ்நாக்ஸ் போன்றவை அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் விற்பனை செய்தார்.
இதுகுறித்து பெட்டிக்கடை வைத்திருக்கும் நபரிடம் ஊர் பெரியவர்கள் பேசினால் தரக்குறைவாக பேசுகிறார். போடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தோம். அங்குள்ள எஸ்.ஐ., அந்த நபருக்கு ஆதரவாக பேசுகிறார்.
அதனால் மாணவர்களின் எதிர்காலம் கருதி நடவடிக்கை எடுக்காத எஸ்.ஐ.,மீதும், மாணவர்களை சீரழிக்கும் பெட்டிக்கடை நபர், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர். இவர்க்ள் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடமும் மனு அளித்தனர்.