/உள்ளூர் செய்திகள்/தேனி/ டூவீலரில் கஞ்சா கடத்தல் : 4 பேர் கைது டூவீலரில் கஞ்சா கடத்தல் : 4 பேர் கைது
டூவீலரில் கஞ்சா கடத்தல் : 4 பேர் கைது
டூவீலரில் கஞ்சா கடத்தல் : 4 பேர் கைது
டூவீலரில் கஞ்சா கடத்தல் : 4 பேர் கைது
ADDED : ஜூன் 12, 2024 12:13 AM
தேனி : தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையிலான போலீசார், பாரஸ்ட் ரோட்டில் ரோந்து சென்றனர்.
அப்போது தேனி பொம்மையக்கவுண்டன்பட்டி விஜய் 26, தனது டூவீலரில் 3 கிலோ 250 கிராம் கஞ்சா, கஞ்சாவை விற்ற பணம் ரூ.5,500, பதுக்கி வைத்திருந்தார். டூவீலர், பணம், கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் விஜயை கைது செய்தனர்.
அவரது வாக்குமூலத்தில் ஆண்டிபட்டி காய்கறி சந்தை அருகில் நாடார் தெருவை சேர்ந்த சங்கிலிராஜா 23, ஏ.வாடிபட்டி வடக்குத்தெரு கணேசன் 24, ஆகியோரை தொப்பையா சாமி கோயில் அருகில் கைது செய்தனர்.
பின் கோட்டூரை சேர்ந்த ராமகிருஷ்ணனை 25 கைது செய்து நடந்த விசாரணையில் நால்வரும் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
நால்வர் மீது வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மேல் விசாரணையை துவக்கி உள்ளனர்.