ADDED : ஜூன் 22, 2024 05:56 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், 'தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
குடும்ப பாதுககாப்பிற்காக ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்' என்பன உள்ளிட்ட முன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். கடமலைக்குண்டு ஒன்றியச் செயலாளர் குமரன் துவக்க உரை ஆற்றினார்.
மாவட்டத் துணைத் தலைவர் சி.குமரன் பேசினார். அரசு ஊழியர்கள் சஙக மாவட்டச் செயலாளர் தாஜூதீன் நிறைவுரை ஆற்றினார். கம்பம் ஒன்றிய கிளைத் தலைவர் சாந்தி நன்றி கூறினார்.